ஜோகூர் பாரு , மார்ச் 7 – நாட்டின் எல்லை திறக்கப்படும்போது ஜோகூர் பாலம் மற்றும் இரண்டாவது பாலத்திற்கான மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கான தரைவழி திறக்கப்படும். சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ Nancy Shukri இதனைத் தெரிவித்தார்.
அதன் பின்னர் சிங்கப்பூர் மக்கள் இந்நாட்டிற்கு சுற்றுலா வருகை மேற்கொள்ளலாம் என அவர் கூறினார். எல்லை திறக்கப்படுவது குறித்து பிரதமர் Ismail Sabri Yaakob விரைவில் அறிவிப்பார் என Nancy Shukri விவரித்தார். கோவிட்-19 தொற்று பரவியது முதல் நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டார்.