
நியு யோர்க், ஜன 13 – மறைந்த Rock and Roll மன்னன் எல்விஸ் பிரேஸ்லியின், ஒரே புதல்வியான பாடகி Lisa Marie Presley காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் இறந்தச் செய்தி, அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
Lisa Marie Presley-க்கு வயது 54 -ஆகும். ஆகக் கடைசியாக தனது தந்தை குறித்த ‘Elvis’ திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, Golden Globe விருதளிப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்தார்.