
சன் சல்வடோர் . ஜன 17 – மத்திய அமெரிக்க நாடான El Salvador ரில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் குறைந்தது 130 வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகின. பலர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், ஞாயிற்றுக்கிழமை முதல் திங்ககிட்கிழமை காலைவரை 219 அதிர்வுகள் அங்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நில நடுக்க பேரிடரில் உயிச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. குறைந்த பட்சடம் 20 நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. வீடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதனை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 5 மணியளவில் ரெக்டர் கருவியில் 5.1 அளவில் பதிவான நில நடுக்கம் எல் சல்வடோரில் ஏற்பட்டது