Latestஇந்தியா

எளிய முறையில் பதவியேற்பு மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 3- தமது முதலமைச்சர் பதவியேற்பு விழா எளிய முறையில் நடைபெறும் என
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கௌளத்தூர் சட்டமன்ற தொகுதியில்  70,230 வாக்கு வேறுபாட்டில் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி சான்றிதழை பெற்றுக்கெண்ட அவர் தமது தந்தையும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

தேர்தலில் வெற்றியை  கொடுத்த மக்களுக்கு ஸ்டாலின் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அவர் கூறினார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மலர்கிறது.  53 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தை பெற்றுள்ள ஸ்டாலின்  2009ஆம் ஆண்டு துணை முதல்வராகவும்  பொறுப்பேற்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!