Latestமலேசியா

எழுத்தாளர் சை.பீர் முகமது காலமானார்

கோலாலம்பூர். செப் 26 – மலேசிய தமிழ் இலக்கிய உலகில் சிறுகதை , நாவல் திறனாய்வு என பல துறைகளில் தன்னிகரற்று விளங்கிவந்த எழுத்தாளர்
சை .பீர் முகம்மது இன்று காலையில் கோலாலம்பூர் பொது மருத்துவனையில் காலமானார். 81 வயதான அவர் சில நாட்களாக உடல் நலமின்றி இருந்து வந்த போதிலும் கைதொலைபேசியில் வாட்சாப் புலனத்தின் மூலமாக தமது கருத்துக்களை அதிகமாக பகிர்ந்து வந்தார்.

உலகளாவிய நிலையில் குறிப்பாக இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் மலேசியா இலக்கியத்திற்கு நல்லதொரு அறிமுகத்தை தமது படைப்புக்கள் மூலம் பீர் முகமது ஏற்டுத்தியிருந்தார் . நகைச்சுவை உணர்வு, தமிழ் மீது ஆழ்ந்த பற்று மற்றும் தமிழ் இளைஞர் மணிமன்றம் , மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற இயங்கங்களிலும் சேவையாற்றியிருக்கும் பீர் .முகமது தமது கடைசி மூச்சுவரை தமிழில் பல சிறந்த படைப்புக்களை கொடுத்து வந்தவர். அவரது சிறுகதைகள் , நாவல்கள் பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளன. அவரது மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு வணக்கம் மலேசியா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!