
கோலாலம்பூர், மே 24 – எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய பின் நான்காவது முகாமிற்கு திரும்பிய மாற்றுத் திறனாளியான Muhammad Hawari
Hashim மை தேடும் நடவடிக்கை இன்று ஆறாவது நாளை எட்டியுள்ள வேளையில் மரண மண்டலம் என வருணிக்கப்படும் பகுதியில் தேடும் பணியில் தீவிர கவனம் செலுத்தப்படும். கடந்த வியாழக்கிழமை நேப்பாள நேரப்படி மாலை மணி 3.30 அளவில் எவரெஸ்ட் சிகரத்தை Muhammad ஏறிய பின் வெள்ளிக்கிழமை அதிகாலை மணி 1.30அளவில் அவர் நான்காவது முகாமை வந்தடைந்துள்ளார். எவரெஸ் சிகரத்தில் 8,000 மீட்டர் உயரத்தில் உடல் நலக் குறைவு பிரச்னையை எதிர்நோக்கியிருந்த 56 வயதுடைய Awang Askandra வை தேடும்படி மலையேறும் நடவடிக்கைக்கான நேப்பாள உதவியாளர் ஷெர்பாவை Hawari கேட்டுக்கொண்டுள்ளார்.
தமக்கு எந்தரு பிரச்னையும் இல்லையென Hawari கூறியதைத் தொடர்ந்து 12 மணி நேரம் தாங்கக்கூடிய பிராணவாயு சாதனத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அந்த ஷெர்பா அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் மீண்டும் நான்காவது முகாமிற்கு திரும்பிவந்தபோது Hawari யை அங்கு காணவில்லை. அப்போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரை எங்கும் பார்க்க முடியவில்லை என ஷெர்பா தெரிவித்தார். போதுமான உணவு Hawari யிடம் இருந்ததாகவும் அவர் கூறினார்.