
காட்மண்டு , ஜூன் 1 – உலகின் உயரமான மலை என்ற பெருமையைக் கொண்ட எவரெஸ்ட் மலையை ஏறி சாதனை படைப்பதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம்வரை அம்மலையை ஏறும் முயற்சியை மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 400 முதல் 500 வரைக்குமான மலையேறிகள் எவரெஸ் மலைக்கு வருகின்றனர். இப்படிவரும் மலையேறிகள் தங்களது மலையேறும் முயற்சியின்போது அவர்கள் பயன்படுத்திய கும்பபைகைள கண்டபடி எவரெஸ்ட் மலைப்பகுதியில் வீசிச் செல்கின்றனர். இந்த கும்பைகளை கொண்ட காணொளி வைரலானதை கண்டு உலகம் முழுவதிலும் உள்ள பல நெட்டிசன்கள் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எவரெஸ்ட் மலையின் சுற்றுப்புற தூய்மைகேட்டை பாதிக்கக்கூடிய இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என அவர்களில் பலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.