Latestமலேசியா

“எஸ்பிஎம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! பின்னடைவைச் சந்தித்தவர்களுக்கு மஇகா வழிகாட்டும்” – டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஜூன் 10- இந்திய மாணவர்கள் உட்பட 2020ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி உயர்கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் தங்களின் விடாமுயற்சியைக் கைவிடாது தொடர்ந்து நன்கு படிக்க வேண்டும்.

அதே வேளையில், பின்னடைவைச் சந்தித்த மாணவர்கள் தொடர்ந்து கல்வியைத் தொடர ஆர்வம் கொண்டிருந்தால் அதற்கான எல்லா உதவிகளையும் மஇகா வழங்கும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

எனவே, எஸ்பிஎம் தேர்வுகளில் போதிய தேர்ச்சி பெறாவிட்டாலும் தொடர்ந்து கல்வியைப் பெற விரும்புபவர்கள், அடுத்த கட்ட கல்விக்கான ஆலோசனைகளைப் பெற விரும்புபவர்கள், மஇகா கல்விக்குழுவையோ அல்லது அவர்களின் சொந்த ஊர்களில் உள்ள மஇகா கிளை, தொகுதி, மாநிலத் தலைவர்களையோ அணுகினால் இயன்றவரையில் மஇகா துணை செய்யும் என தன் வாழ்த்துச் செய்தியில் அவர் பகிர்ந்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!