Latestமலேசியா

எஸ்பிஎம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர். ஜூன் 8 – இன்று எஸ்பிஎம் தேர்வில் வெற்றிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மஇகாவின் தேசியத் தலைவரும் எம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டான்ஸ்ரீ டாக்டர் SA விக்னேஸ்வரன் தமது நெஞ்சார வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். சிறந்த அடைவு நிலை கண்ட மாணவர்கள் கவலையோ அல்லது சஞ்சலப்பட வேண்டியதில்லை. அரசாங்க பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத மாணவர்கள் எந்தவித சஞ்சலமும் கொள்ள வேண்டாம். காரணம் நமது இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்காகவே மஇகாவினால் தோற்றுவிக்கப்பட்ட ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் பல்வேறு கல்விச் சேவைகளை வழங்கிக் கொண்டிருப்தாக விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்,

அந்த வகையில், கடந்த ஆண்டு மஇகாவின் கல்விக் கரமான எம்ஐஇடி சிறப்பு தேர்ச்சி பெற்ற 26 மாணவர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி தொடர உபகாரச் சம்பளம் வழங்கியது. இவ்வாண்டும் பொதுப் பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வித் தொடர இடம் கிடைக்காதவர்கள், உடனடியாக எம்ஐஇடி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து தங்களுக்குரிய விளக்கங்களை பெற்றுச் செல்லலாம். அல்லது எம்ஐஇடி அலுவலகத்திற்கு 03-40422885)என்ற எண்களில் விளக்கம் பெறலாம்.

இவ்வாண்டு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் (எம்பிபிஎஸ்) பயில 200க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. பல் மருத்துவம் பயில்வதற்கு 100க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. எனவே, மாணவ, மாணவிகளின் உயர்க்கல்வி வழிகாட்டவே ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வழி வகுத்திருக்கிறது.
அதே வேனையில் சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்கள் தொழிற்கல்வியை மேற்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு வாய்புக்கள் உள்ளன. அதனை எஸ்.பி.எம் முடித்த மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களின் கல்விக்காக பல்வேறு சிரமங்கள் – முயற்சிகள் – போராட்டங்களை எதிர்கொண்ட பெற்றோர்கள் – ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இந்த வேளையில் தமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் விக்னேஸ்வரன் தெரிவித்துக கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!