Latestமலேசியா

எஸ்.டி.பி.எம் தேர்வை அகற்ற வேண்டிய அவசியமில்லை !

கோலாலம்பூர், மார்ச் 28 – ஆறாம் படிவ கல்வி மற்றும் எஸ்.டி.பி.எம் சான்றிதழை அகற்ற வேண்டிய அவசியம் இல்லையென கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார். 1996 ஆம் ஆண்டின் கல்வி சட்டத்திற்கு ஏற்ப கல்வி அமைச்சு வழங்கும் ஆறாம் படிவம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வு இருப்பதால் அது தொடர்ந்து நீடித்திருப்பது மற்றும் தொடரப்பட வேண்டும் என அவர் கூறினார். அனைத்துலக தரத்திற்கு ஏற்ப மேல் உயர்நிலை மாணவர்கள் கல்வியை பெறும் நோக்கத்தில் ஆறாம் படிவம் மற்றும் STPM உருவாக்கப்பட்டுள்ளதோடு அதனை Cambridge மதிப்பீட்டு அனைத்துலக கல்வி அங்கீகரித்துள்ளதாக Fadhlina கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!