கோலாலம்பூர், ஜூலை-9, ஆறாம் படிவ மாணவர்களுக்கு வாழ்க்கைச் செலவுப் படித்தொகை (allowance) வழங்கும் பரிந்துரை, 2025 வரவு செலவு அறிக்கையில் சேர்க்கப்படும்.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) அதனைத் தெரிவித்துள்ளார்.
கிடைக்கிறதோ இல்லையோ அமைச்சு கண்டிப்பாக அதற்காகப் போராடும் என்றார் அவர்.
எஸ்.டி.பி.எம் கல்வியின் மறுதோற்ற முயற்சியில் ஒரு பகுதியாக அந்த படித்தொகை பரிந்துரை ஆராயப்படுவதாக ஃபாட்லீனா ஏற்கனவே கூறியிருந்தார்.
அது, மேலும் ஏராளமான மாணவர்களை ஆறாம் படிவ கல்விக்கு கவர்ந்திழுக்கும் முயற்சியாகும்.
2025 பட்ஜெட்டை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அக்டோபர் 18-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.