புத்ரா ஜெயா, பிப் 28 – 2021 ஆண்டின் எஸ்.பி.எம் தேர்வு மார்ச் 2 புதன்கிழமை தொடங்கி மார்ச் 29ஆம் தேதிவரை நடைபெறும். நாடு முழுவதிலும் சுமார் 407,097 மாணவர்கள் இத்தேர்வை எழுதவிருக்கின்றனர்.
எஸ்.பி.எம் தேர்வு சுமுகமாக நடைபெறுவதற்கு 50,514 தேர்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வில் அமரும் அனைத்து மாணவர்களும் தங்களது மை கார்ட் மற்றும் தேர்வுக்கான பதிவு ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டனர்.