Latestஉலகம்

ஏபெக் கூட்டத்தில் காஸா இரத்தக் களரிக்கு எதிராக அன்வார் குரல் எழுப்பினார்

சன்பிரான்சிஸ்கோ , நவ 17- இஸ்ரேலின் இடைவிடாத வான் மற்றும் தரைத் தாக்குதல்களுக்கு மத்தியில் காசா பகுதியில் நடக்கும் இரத்தக்களரி குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று குரல் கொடுத்தார். காசாவில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது தார்மீக பொறுப்பு கைவிடப்படுவதால் இஸ்ரேல் பெரிய அழிவை ஏற்படுத்தி வருகிறது என அன்வார் கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இதர தலைவர்கள் முன்னிலையில் ஏபெக் (APEC) பொருளாதார தலைவர்களின் அதிகாரபூர்வமற்ற உரையாடலின்போது அன்வார் தமது கருத்தை வெளியிட்டார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7,800 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 11,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதே வேளையில் இன்றைய நாள் வரை 29,000 த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏபெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சான் பிரான்சிஸ்கோவில் இருந்துவரும் அன்வார் தொடர்ந்து பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை சுட்டிக்காட்டி வருகிறார். தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி பாலஸ்தீனம் மட்டுமின்றி மத்திய கிழக்கு வட்டாரத்திலும் மோசமான பாதிப்பை ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளதாக அவர் எச்சரித்தார். பாலஸ்தீனத்தில் தற்போது நடக்கும் சம்பவங்கள் அனைத்துலக சட்டத்தின் வெளிப்படையான மீறல்களாக உள்ளன என இவ்வார தொடக்கத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு விரிவுரையின்போது அன்வார் சுட்டிக்காட்டியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!