
கோலாலம்பூர், ஜன 9 – இவ்வாண்டு ஏப்ரல் முதலாம் தேதி முதல் புதிய விற்பனை வரியை மலேசியர்கள் செலுத்தவிருக்கின்றனர் .
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், 500 ரிங்கிட்டுக்கும் கீழ் மதிப்புடைய பொருட்களை ஒவ்வொரு முறையும் நீங்கள் வாங்கும் போது , அந்த பத்து விழுக்காடு அதிகமான தொகையை மலேசியர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
இணையம் வாயிலாக விற்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து மலேசியாவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு அரசாங்கம் அந்த 10 விழுக்காடு விற்பனை வரியை விதிக்கவிருக்கின்றது.