Latestமலேசியா

ஏப்ரல் முதல் நடப்பில் ஒரு SOP மட்டுமே இருக்கும் – தற்காப்பு அமைச்சர்

ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி மலேசியா endemic கால கட்டத்திற்குள் நுழையும் போது, நடப்பில் இருக்கும் 181 SOP- களுக்குப் பதிலாக ஒரு SOP மட்டுமே நிலைநிறுத்தப்பட்டிருக்குமென , தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹூசேன் தெரிவித்தார்.

எனினும், 342-வது சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கும் அந்த ஒரு SOP, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 தேவைகளை உட்படுத்தியிருக்கும் .

பொதுவிடத்தில் முகக் கவசம் அணிவது, வர்த்தகங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்ப செயல்படுவது, கைகளின் சுகாதாரத்தை பேணுவது, கோவிட் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வது, மைசெஜாத்ராவில் வருகையைப் பதிவு செய்வது, குறிப்பிட்ட இடங்களில் நுழைய தேவைப்படும் முழு தடுப்பூசிக்கான தகுதியைக் கொண்டிருப்பது ஆகியவை அந்த 10 தேவைகளில் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!