
சென்னை, டிச 28 – மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகம் , அடுத்தாண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி திரையீடு காணவிருக்கின்றது.
திரும்பி வந்திருக்கின்றனர் சோழர்கள் ! என பதிவிட்டு, அப்படத்துக்கான வெளியீட்டு தேதியை , தயாரிப்பு நிறுவனமான லைகா ( Lyca) நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.
கல்கி எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோர் நடித்திருக்கும் அந்த திரைப்படம் வசூல் சாதனையையும் படைத்திருந்தது.