Latestசினிமா

ஏப்ரல் 29-ஆம் தேதி ‘பரமபதம்’ திரைக்கு வருகிறது

கோலாலம்பூர், ஏப்ரல் 21- அனைத்துலக திரைப்பட விழாக்களில் 18 விருதுகளை வாகை சூடியிருக்கும் உள்நாட்டு தமிழ் திரைப்படமான பரமபதம், அனைத்துலக  சந்தைக்குள்  ஊடுருவும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக, தொடர்பு பல்லூடக துணையமைச்சர் டத்தோ சஹீடி சய்னால் அபிடின் ( Datuk  Zahidi  Zainal Abidin) தெரிவித்தார்.
 
அனைத்துலக அளவில் பல்வேறு விருதுகளையும், இந்தியாவில்  நல்ல வரவேற்பையும் பெற்றுள்ள அந்த திரைப்படக் குழுவினருக்கு துணையமைச்சர் பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டார்.
 
பரமபதம் நல்ல திரைப்படம் என்பதோடு, திறமைகளை  நன்றாக வெளிப்படுத்தியிருக்கும் நடிகர்கள், பாடகர்கள் ஆகியோரையும் கொண்டுள்ளது.  பாடலும் சிறப்பாக அமைந்திருக்கும் நிலையில் , அந்த திரைப்படம்  அனைத்துலக சந்தைக்குள் நுழைவதற்கான தரத்தினைக் கொண்டிருப்பதாக,  டத்தோ சஹீடி சய்னால் அபிடின் குறிப்பிட்டார்.
 
பரமபதம் திரைப்படத்தின், டிரெலர் முன்னோட்ட காட்சியை தொடக்கி வைத்தப் பின்னர், துணையமைச்சர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். பரமபதம் , அனைத்துலக அளவில் அதிக விருதுகளைப் பெற்றதற்காக, மலேசிய சாதனைப் புத்தகத்திலும், Asian World Records, Grand Asian Book of World Records  ஆகிய  சாதனைப் புத்தகங்களிலும்  இடம்பிடித்துள்ளது.
 
விக்னேஷ் பிரபு, தனேஷ் பிரபு ஆகிய  இரு சகோதரர்கள் இணைந்து இயக்கியிருக்கும் அந்த திரப்படம் இம்மாதம் ஏப்ரல் 29- ஆம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!