
தலைநகர், பிப் 2 – புக்கிட் ஜாலில் அரங்கத்தில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்ச்சி குறித்து, இனத்துவேஷ கூற்றை வெளியிட்ட செல்வாக்கு மிகுந்த “fatinamyralee” என்ற நபருக்கு எதிராக போலீஸ் விசாரணை அறிக்கையை திறந்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் வைரலான காணொளி குறித்து நேற்று புகார் ஒன்று செய்யப்பட்டதை செராஸ் போலீஸ் தலைவர் ஜாம் அலிம் ஜமாலுடின் உறுதிப்படுத்தினார்.
பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டத்தின் 504-வது பிரிவின் கீழும், தொடர்பு பல்லூடக சட்டத்தின் கீழும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அது தொடர்பில் சிலரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டு முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஜாம் அலிம் சுட்டிக் காட்டினார்.
அதனால், அச்சம்பவம் தொடர்பில் விவரம் அறிந்தவர்கள் 03-21159999 என்ற எண்ணில் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.