Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

ஏர் பூசான் விமானத்தில் இருக்கைக்கு மேலே பவர் பேங்க் சாதனம் வைக்க அனுமதியில்லை

சோல், பிப் 5 – கடந்த வாரம் தனது விமானங்களில் ஒன்றில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து பயணிகள் இருக்கைக்கு மேல் பொருட்கள் வைக்கும் பகுதியில் பவர் பேங்க் ( Power Bank ) எனப்படும் மின் கடத்திகளை வைப்பதற்கு அனுமதியில்லையென தென் கொரியாவின் ஏர் பூசான் ( Air Busan ) விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த தீ விபத்து குறித்து தென் கொரிய அதிகாரிகள் தலைமையிலான விசாரணை தொடங்கியுள்ளது. எனினும் அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

விமான விபத்துக்கள் எப்போதும் பல்வேறு காரணங்களால் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பயணிகள் தாங்கள் கைகளில் எடுத்துச் செல்லும் பேக்குகளை விமானத்திற்கு செல்லும் பகுதியில் பரிசோதிக்கப்பட்டு பவர் பேங்க் இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களுக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படும்.

வெள்ளிக்கிழமை தொடங்கும் இந்த பரிசோதனை நடவடிக்கை அனைத்து விமானங்களிலும் விரிவுபடுத்தப்படும் . எந்தவொரு பவர் பேங்கும் பயணிகளிடம் இருக்க வேண்டும். இதன்வழி அதிக வெப்பம், புகை அல்லது நெருப்பு ஆகியவற்றை விரைவாகக் கண்டறிந்து சமாளிக்க முடியும்.

பவர் பேங் அதிக வெப்பமடைவதைக் கருத்திற்கொண்டு ,விமான பணியாளர்களுக்கு கூடுதல் தீயணைப்புப் பயிற்சி வழங்குவது மற்றும் விமானத்தில் தீ கட்டுப்பாட்டு உபகரணங்களை வைத்திருக்கும் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் பூசன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 28 ஆம் தேதி ஹாங்காங்கிற்கு புறப்படுவதற்கு விமானம் தயாராகிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட அந்த விமானத்தின் பின் இடது புறத்தில் பொருட்கள் வைக்கும் மேல்நிலை பகுதியில் ஏற்பட்ட தீ விமானப் பணிப்பெண் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!