Latestஉலகம்

ஏலத்தில் வாங்கிய துணிப் பெட்டிக்குள் மனித உடல்; அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பம்

ஒக்லெண்ட், ஆகஸ்ட் 17 – நியூசிலாந்தின் ஒக்லெண்ட் (Auckland) நகரில் ஏலத்தின் மூலம் விற்கப்பட்ட துணிப் பெட்டிகளை ஆசையோடு வாங்கிய குடும்பமொன்றுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அத்துணிப் பெட்டிகளை வீட்டுக்குக் கொண்டு வந்துத் திறந்துப் பார்த்த போது உள்ளே மனித உடல் இருந்தது கண்டு அக்குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். ஆயினும் இச்சம்பவத்திற்கும் பெட்டிகளை வாங்கிய குடும்பத்தினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிப் படுத்திய நியூசிலாந்து போலீசார், இதன் தொடர்பில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

துணிப் பெட்டிகளை விற்பனை செய்த நிறுவனம், கிடங்கில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொருட்களை ஏலத்தில் விற்க முயன்று, மற்ற பொருட்களோடு சேர்த்து, துணிப் பெட்டிகளையும் விற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபோன்று கைவிடப்பட்ட பொருட்களை ஏலத்தில் வாங்கும் தரப்பினர் பெரும்பாலான சமயங்களில் அப்பொருட்களைப் பரிசோதிப்பது கிடையாது என போலீஸ் அதிகாரிகள் கூறினர். இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறை தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!