Latestமலேசியாவிளையாட்டு

ஜூனியர் உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஹாக்கி போட்டி மலேசியா 7 – 1 கோல் கணக்கில் சிலியை வீழ்த்தியது

கோலாலம்பூர், டிச 6 – தேசிய ஹாக்கி விளையாட்டரங்களில் நேற்று நடைபெற்ற ஜூனியர் உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியின் தகுதி சுற்றுப் போட்டியில் ஏ பிரிவு ஆட்டத்தில் மலேசியா 7 – 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

எனினும், நேற்றைய ஆட்டத்தில் 60 விழுக்காடு மட்டுமே மலேசியா குழுவினர் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தியதாகவும் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளராக அர்ஜென்டினாவை வீழ்த்துவதற்கு தங்களது முழு திறமையைம் வெளிப்படுத்துவார்கள் என தேசிய ஹாக்கி குழுவின் பயிற்சியாளர் அமீன் ரஹீம் தெரிவித்தார்.

இந்த போட்டியின் தொடக்க விழாவான நேற்று தமிழ்,  பங்காரா, சீன ,மலாய் , சபா மற்றும் சரவா ஆகிய கலச்சாரத்தை பிரதிபலிக்கும் நடனங்களும் நடைபெற்றன. தொடக்க விழா நிகழ்ச்சியில் 6,000 மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். மாட்சிமை தங்கிய பேரரசரும் யூங் டைகர் எனப்படும் மலேசிய குழுவுக்கு ஆதரவை வழங்குவதற்கு நேற்று தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!