
கோலாலம்பூர், ஜன 9 – நாடு முழுவதுமுள்ள தமிழ்ப் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் இருந்தால் , அவர்களுக்கு உதவும் வகையில் , அப்பள்ளிக்கூடங்கள் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு துணைப்பிரதமரின் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி ரமேஷ் ராவ் கேட்டுக் கொண்டார்.
பள்ளிப் புத்தகம், பள்ளிச் சீருடை போன்ற கற்றலுக்கு தேவையான உதவிகளைச் செய்ய தம்மை தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறினார்.
அரசாங்க ஒதுக்கீட்டின் வாயிலாக வழங்கப்படும் நிதி சம்பந்தப்பட்ட மாணவர்களை சென்றடைவதில் நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், தமது சொந்த முயற்சியில் இந்த உதவியை செய்யவிருப்பதாக ரமேஷ் ராவ் குறிப்பிட்டார்.
தம்மை , 012- 3560105 016 மற்றும் 016 -3112371 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறினார் .