
கோலாலம்பூர், மார்ச் 12 – மலேசியர்களின் வறிய நிலை தரவுகளை சேகரிப்பதற்காகவும் அதேவேளையில் ஏழ்மையை துடைத்தொழிப்பதற்காகவும் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள Ekasih திட்டத்தை மக்களுக்கு தெரிவிப்பதில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஏழ்மை திட்டங்கள் அமுலாக்கத்தை கண்காணிப்பதற்காகவும், உதவி திட்டங்கள் மற்றும் அதனை அமல்பத்துவதற்காகவும் தேசிய நிலையில் வறிய ஏழைகளின் விவரங்களை அல்லது தரவுகளை திரட்டும் நோக்கத்தை Ekasih கொண்டுள்ளது. இந்த தரவுகளின் மூலம் Mykasih, Rahmah ரொக்க உதவித் திட்டம் , I Suri யில் இ.பி.எப்பில் 480 ரிங்கிட் ஊக்குவிப்பு நிதி, உட்பட 9 வகை உதவித் திட்டங்களை பெறமுடியும். எனவே இத்திட்டத்தில் தகுதிபெறுவோர் குறித்து விழிப்புணர்வு மேலும் விரிவு படுத்த வேண்டுமென குலசேகரன் கேட்டுக்கொண்டார்.
Ekasih திட்டம் தொடர்பாக பலர் இன்னும் அறிந்திருக்காத நிலையில் இது குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு குறிப்பாக வரிய ஏழ்மையில் உள்ளவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்த திட்டம் தொடர்பாக ஈப்போவிலுள்ள தமது சேவை நிலையத்தில் பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவின் பேரா மாநில அதிகாரி Khairul விளக்கம் அளிக்கும் நிகழ்சியை ஏற்பாடு செய்தபோது குலசேகரன் இதனை தெரிவித்தார்.