
புதுடில்லி, மார்ச் 16 -Ukraine மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளதால் உலகளாவிய நிலையினான ஏழ்மை நிலையை துடைத்தொழிப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என இந்தியா அறைகூவல் விடுத்துள்ளது.
G20 இயக்கத்தின் உச்சநிலை கூட்டத்திற்கான இந்தியாவின் உயர் அதிகாரியும் முக்கிய பேச்சாளருமான Amitabh Kant இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில் அடுத்தடுத்து G20 இயக்கத்தின் இரண்டு அமைச்சர் நிலை கூட்டங்கள் புதுடில்லியில் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து Amitabh Kant இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு G20 அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, உலக நெருக்கடியின் தாக்கத்தினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.