Latestமலேசியா

ஏஷா இணைய பகடிவதை சம்பவம் ; மேலும் ஒரு சந்தேக நபர் சரணடைந்தான்

கோலாலம்பூர், ஜூலை 11 – சமூக ஊடக பிரபலமான அ.ராஜேஸ்வரி அல்லது ஏஷாவை இணைய பகடிவதை செய்து, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நம்பப்படும், இரண்டாது சந்தேக நபர் நேற்று தாமாக முன் வந்து போலீசாரிடம் சரணடைந்துள்ளான்.

40 வயது மதிக்கத்தக்க “Dulal Brothers” என அழைக்கப்படும் அந்நபர், நேற்று மாலை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைந்தான்.

அதன் பின்னர், செந்தூல் போலீசார் அவனை கைது செய்ததாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு உதவும் பொருட்டு, அவனை தடுத்து வைக்கும் அனுமதியை பெற, இன்று காலை அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவான் என செந்தூல் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அஹ்மாட் சுகர்னோ முஹமட் ஜஹாரி (Ahmad Sukarno Mohd Zahari) தெரிவித்தார்.

இவ்வேளையில், 30 வயது தன்னார்வலருமான ஏஷாவின் தற்கொலை தொடர்பில், இதற்கு முன் கைதுச் செய்யப்பட்ட பெண் சந்தேக நபரின் தடுப்புக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவ்விரு சந்தேக நபர்களும், இணைய மிரட்டல், துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் ஏஷா தொடர்பில் அவதூறான கூற்றுகளை வெளியிட்டதால், அவர் அவமானம் மற்றும் மோசமான மன அழுத்தத்திற்கு இலக்கானதாக கூறப்படுகிறது.

ஏஷாவின் உடல் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கண்டெடுக்கப்படுவதற்கு முன், அவ்விருவர் குறித்து அவர் போலீஸ் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

எஷாவின் மரணம், மக்களின் சினத்தை தூண்டியுள்ளதோடு, பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!