
சென்னை, ஜன 19 – இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் ஸ்டுடியோவில் ஏற்பட்ட விபத்தில் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த லைட்ஸ்மேன் குமார் இறந்தார். மின் விளக்குகளைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் மரணம் அடைந்தார் . சென்னையில் ஏ.ஆர் பிலிம் சிட்டி என்ற ஸ்டுடியோவில் இந்த விபத்து நிகழ்ந்தது. சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படத்திற்கான படப்பிடிப்புக்கு செட் போட்டிக்கொண்டிருந்தபோது கால் தடுக்கி மேலிருந்து குமார் கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதிலும் வழியிலேயே அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனிடையே லைட்ஸ்மேன் குமார் மரணம் அடைந்தது தொடர்பில் அவரது குடும்பத்திற்கு ஏ.ஆர் ரகுமான் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.