Latestமலேசியா

ஏ.ஆர் ரஹ்மானுடன் இசைமேடையைப் பகிரும் சித்தி நுர்ஹாலிசா

கோலாலம்பூர், ஜன 25 – இவ்வாரம் சனிக்கிழமை, புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறும் ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில், அந்த பிரபல இசையமைப்பாளருடன் நாட்டின் புகழ்பெற்ற மலாய் பாடகியான Datuk Seri Siti Nurhaliza மேடையை பகிர்ந்து கொள்ளவிருக்கின்றார்.

அந்த இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு கலைஞராக , சித்தி அழைக்கப்பட்டிருப்பதையும், தனது புகழ்பெற்ற சில பாடல்களை அவர் பாடவிருப்பதையும், DMY Creation நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் Mohd Maideen Abdullah உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, அந்த இசை நிகழ்ச்சிக்கு இன்னும் 3 தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில், இதுவரை 50,000 டிக்கெட்டுகள் விற்று முடிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!