கிள்ளான், பிப் 8 – பெக்கான் மேருவில் உள்ள பலசரக்குக் கழைக்குள் வைக்கப்பட்டிருந்த ATM machineனை வெடிக்கச்செய்து அதிலிருந்த ரொக்கத் தொகையை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மணி 8 அளவில் கடையைத் திறக்கவந்தபோதுதான் அங்கு கண்ணாடி துண்டுகள் உடைந்து கிடந்ததையும் ஏ.டி.எம் பண பட்டுவாடா இயந்திரம் திறந்த நிலையில் கிடந்ததையும் கண்டு கடை ஊழியர்கள் தங்களுக்குத் தகவல் கொடுத்ததாக வடகிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் S. Vijaya Rao கூறினார். கடைகொள்ளையடு கடையினுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் வழியாக இந்த கொள்ளைச் சம்பவம் விடியற்காலை மூன்றுமணி முதல் 4 மணிவரை நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையும் தேடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக Vijaya Rao தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்6 hours ago