செகாமாட், பிப் 8- Segamat-Kuantan பகுதியில் உள்ள கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன ஏ.டி.எம் இயந்திரம் ஒன்றை கொள்ளையடிக்க முயற்சித்த ஆடவனின் செயல் தோல்வியில் முடிந்தது.
நேற்றிரவு 11.15 மணியளவில் அந்தக் கடைக்குள் நுழைந்த சம்பந்தப்பட்ட ஆடவன் ஏ.டி.எம் இயந்திரத்தைத் திறக்க கிட்டதட்ட ஒரு மணி நேரம் போராடுவதும் பின் 12.15 மணியளவில் கடையிலிருந்து வெளியேறும் காட்சியும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
கடை நிர்வாகத்திடமிருந்து புகார் பெற்றதையடுத்து, அந்த ஆடவனைத் தேடி வருவதாக சிகாமாட் மாவட்டப் போலீஸ் தலைவர் Superintenden Bahrin Mohd. Noh தெரிவித்தார்.