Latestஉலகம்

ஐயப்பன் ஆலயங்களில் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம்; சபரிமலையில் 18 மணி நேர தரிசனம்

கோலாலம்பூர், நவம்பர்-20 – நவம்பர் 16-ல் கார்த்திகை மாதம் பிறந்ததிலிருந்து நாட்டிலுள்ள ஐயப்பன் ஆலயங்கள் பக்தர்களால் நிரம்பி வழிகின்றன.

தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைப்பான் ஐயப்பன் என்ற ஆழமான நம்பிக்கையில், ‘சாமியே……ய் சரணம் ஐயப்பா…‘ என மனமுருகி தினமும் பூஜைகள், பஜனைகள், அபிஷேகம் என பக்தர்கள் திரளாகப் பங்கேற்று வருகின்றனர்.

குறிப்பாக ஐயப்பன் சன்னதிகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று குருசாமி மற்றும் அர்ச்சகர் மூலம் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

இவ்வேளையில், கேரளாவில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் என்பதால் இருமுடி கட்டி யாத்திரை செல்லும் பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால், தினமும் 18 மணி நேரங்களுக்கு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் 3 லட்சம் பேர் சபரிமலை ஐயப்பனை தரிசித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!