இன்று காலை ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப் பெரிய Zaporizhzhia அணு உலை நிலையத்தில் தீப்பிடித்தது. உள்ளூர் படைகளுக்கும் ரஷ்ய துருப்புக்களுக்குமிடையே நிகழ்ந்த கடுமையான சண்டையின்போது அந்த அணு உலை தாக்கப்பட்டதாக உக்ரைய்னிலுள்ள Energodar நகர மேயர் Dmytro Orlov தெரிவித்தார்.
அந்த அணு உலையை கைப்பற்றும் நோக்கத்தோடு டிரக்குகளுடன் ரஷ்யப் படைகள் நகருக்குள் நுழைந்ததாக கூறப்பட்டது. ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் அந்த அணு உலை தீப்பற்றியது. உலகின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளதாக Dmytro Orlov தெரிவித்தார். எனினும் இது குறித்த மேல் விவரங்கள் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.