Latestமலேசியா

ஐவர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட சஞ்சிட் குமார் மரணம் விக்னேஸ்வரன் காயம்

கோலாலம்பூர், மார்ச் 13- பங்சார் ஜாலான் தெலாவி மூன்றில் கடைவீதிகளுக்கு பின்புறம் இன்று விடியற்காலையில் ஐவர் கொண்ட ஆடவர் கும்பலால் பீர் போத்தல்கள் தாக்கப்பட்டதோடு கத்தியால் குத்தப்பட்ட 28 வயதுடைய இளைஞர் மாண்டார். பத்துகேவ்ஸ் கம்போங் லக்ஸ்மானா ஜெயாவைச் சேர்ந்த சஞ்சிட் குமார் மூர்த்தி இறந்தார் என அடையாளம் கூறப்பட்டது. அந்த சம்பவத்தில் 30 வயதுடைய விக்னேஸ்வரன் ஜெயபாலன் காயத்திற்கு உள்ளானார். ஜாலான் சிபு , தாமான் வாயுவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று விடியற்காலை ஒரு மணியளவில் பொழுதுபோக்கு விடுதியிலிருந்து கார் நிறுத்தும் பகுதிக்கு சஞ்சிட் குமார் தனது நண்பர் விக்னேஸ்வரனுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். தனக்கு அறிமுகமான ஐவர் கொண்ட கும்பலால் சஞசிட் குமார் தாக்கப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் அனுவார் ஒமார் தெரிவித்தார்.
சஞ்சிட் குமாருக்கும் சந்தேகப் பேர்வழிகளுக்கும் இருந்து வந்த பழைய பகையினால் அவர் பழிவாங்கப்பட்டிருக்கலாம் என அனுவார் ஒமார் தெரிவித்தார். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஐந்து சந்தேகப் பேர்வழிகளும் அடையாளம் காணப்பட்டதோடு அவர்களை போலீசார் தேடிவருவதாகவும் அவர் கூறினார். .
ஜாலான் தெலாவி மூன்றில் உள்ள அப்ஃபின் பேங்க் பின்புறம் ஆடவர் ஒருவரை சில நபர்கள் தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமுக வலைத்தலங்களில் வைரலானது. தலைக்கவசத்தைக் கொண்டு ஒரு கும்பல் தாக்குவதும் உடலில் இரத்தம் வெளியேறும் நிலையில் அந்த கும்பலிடமிருந்து இருவர் தப்பியோடுகின்றனர். அதன் பிறகு உடலில் கடுமையாக காயம் அடைந்த நிலையில் ஒருவர் தரையில் கீழே விழுந்து கிடப்பதையும் மற்றொரு ஆடவர் அவரை அழைக்க முயல்வதையும் அந்த காணொலியில் காணமுடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!