
சென்னை,மார்ச் 31 – நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டைத் தொடர்ந்து பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டிலும் நகைகள் கொள்ளையிடப் பட்டிருப்பதாக போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தனது வீட்டிலிருந்து 60 சவரன் நகைகள் அல்ல, 200 சவரன் நகைகள் திருடுப் போடியிருப்பதாக ஐஸ்வர்யா புதிய போலீஸ் புகாரைச் செய்திருக்கும் நிலையில், அதேபோன்றதொரு திருட்டு சம்பவம் தங்களது வீட்டிலும் நிகழ்ந்திருப்பதாக விஜய் யேசுதாசின் மனைவி புகார் அளித்திருக்கின்றார்.
தங்களது வீட்டில் இருந்து 60 சவரன் தங்க, வைர நகைகள் காணாமல் போயுள்ளதாக விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா பாலா போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கின்றார்.
அந்தப் புகாரில், வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.