
சிம்பாங் பூலாய், செப்டம்பர் 19 – பெர்சியரான் இண்டஸ்ட்ரி ராபாட் பகுதியிலுள்ள, ஐஸ் தொழிற்சாலை ஒன்றில், அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
அதிகாலை மணி 5.11 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்தவுடன், சிப்பாங் பூலாய் தீயணைப்பு மீட்புப் படை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலையிலுள்ள, அம்மோனியா வாயு குழாயில் கசிவு ஏற்பட்டதால், 30 முதல் 90 மீட்டர் தூரத்திற்கு வாயு நாற்றம் பரவி இருந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து, சம்பவ இடத்தை சென்றடைந்த HAZMAT – அபாயகரமான இரசாயன பொருளை நிர்வகிக்கும் சிறப்பு குழுவினர், அம்மோனியா கசிவு ஏற்பட்ட குழாயை அடைத்ததை தொடர்ந்து நிலைமை மெல்ல வழக்கத்துக்கு திரும்பியது.