Latestஉலகம்

ஐ.எஸ் தாக்குதல்; காபுல் நகரம் இருளில் மூழ்கியது

காபுல் , அக் 23 – ஆப்கானிஸ்தானில் முக்கிய மின் இணைப்பு மையத்தில்
ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காபுல் நகரம் இருளில் மூழ்கியது.
ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அங்கு வழக்க நிலையை ஏற்படுத்தும் தலிபான்களின் முயற்சிக்கு தற்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காபுல் மற்றும் இதர பகுதிகளுக்கான மின் வினியோகத்தின் முக்கி மையத்தை தாங்கள் வெடி வைத்து தாக்கியதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது.

ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக துடைத்தொழிப்பதற்கு தலிபான் உறுதிபூண்டுள்ளனர். எனினும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் இறுதியாக மின் வினியோக நிலையத்திலும் தாக்குதல் நடத்தி பெரிய அதிர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!