
நியுயார்க், செப் 19 – ஐ.நாவின் 78 ஆவது பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் மலேசிய பேராளர் குழுவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்பார். பல்வேறு உலகத் தலைவர்களுடன் கலந்துகொள்ளும் அன்வார் முதல் முறையாக மலேசிய பிரதமர் என்ற முறையில் ஐ.நா பொதுப் பேரவையில் உரையாற்றவிருக்கிறார். உலகளாவிய நிலையிலான பருவ நிலை நெருக்கடி மற்றும் அதனை களைவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அன்வாரின் உரை அமைந்திருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மலேசியாவின் Madani கொள்கை மற்றும் அது தொடர்பான செயல்முறை திட்டம் குறித்தும் அன்வார் உரையாற்றுவார் என வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ Zamry Abdul Kadir ஐ.நாவுக்கான மலேசியாவின் நிரந்தர அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.