Latestஇந்தியா

ஐ.நா மனித உரிமை அதிகாரியை இந்தியா சாடியது

புதுடில்லி. டிச 3 – ஜம்மு- காஷ்மீர் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கூறிய மனித உரிமைகள் மீதான ஐ.நா அதிகாரியை இந்தியா சாடியது. பயங்கரவாதத்தை மனித உரிமையுடன் தொடர்புபடுத்தி பேசி தவறான புரிந்துணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்கும்படி மனித உரிமைக்கான ஐ.நா ஆணையர் அலுவக அதிகாரியை இந்தியா கேட்டுக்கொண்டது. எல்லையை கடந்த பயங்கரவாதத்தினால் இந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்நோக்குவதை ஐ.நா உணர்ந்து கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற குறிப்பிட்ட சில நிகழ்வுகளை மட்டும் சுட்டிக்காட்டி மனித உரிமைகள் மீதான ஐ.நா அதிகாரி கருத்துரைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சின் பேச்சாளரான Arindam Bagchi தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!