
இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த 3 ரயில்கள் சம்பந்தப்பட்ட விபத்க்தில் மரண எண்ணிக்கை 288 -ஐ எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று அவ்விபத்தில்
கோர மண்டல் மற்றும் பெங்களூரு ரயில்களின் பெட்டிகள் அருகில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதி நொறுங்கின.
அந்த விபத்தில் 1,200 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களில் பலர் பல்வேறு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று காலையில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்றது.
கோர மண்டல் எஸ்பிரஸ் லைன் மாறி சென்றதால் கோர விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.
இதனிடையே ஒரே இடத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்தக்குள்ளாகியது குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தும் என இந்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டதோடு மீட்பு பணிகளில் உதவிய பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.