ஒட்டாவா, பிப் 3 – கட்டாயமாக தடுப்பூசி போடும் உத்தரவை அரசாங்கம் மீட்டுக்கொள்ளாவிட்டால் கடந்த ஆறு நாட்களாக ஒட்டாவா நகரில் மேற்கொண்டு வரும் மறியலை நிறுத்தப்போவதில்லை என கனடா டிரக் ஓட்டுனர்கள் சூளுரைத்துள்ளனர். கனடிய தலைநகர் ஒட்டாவாவில் முற்றுகையிட்டுள்ள வாகன ஓட்டுனர்களின் முரட்டுத்தனமாக போக்கினால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளுர் மக்களிடமிருந்து அதிகமான புகார்களை கனடா போலீசார் பெற்றுள்ளனர். எனினும் டிரக் ஓட்டுனர்களின் மறியலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு போலீசார் மறுத்து வருகின்றனர். எல்லையை கடந்து செல்லும் டிரக் ஓட்டுனர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற பிரதமர் Justin Trudeau தலைமையிலான லிபரல் அரசாங்கத்தின் உத்தரவு கனடிய மக்களின் சுதந்திரத்திற்கு எதிரான கட்டுப்பாடாக இருப்பதாக டிரக் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Articles
Check Also
Close