ஒட்டாவா, பிப் 17 – 20 நாட்களுக்கும் மேலாக கனடா தலைநகர் ஒட்டாவா மற்றும் இதர நகர்களில் மறியலில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுனர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி போலீசார் எச்சரித்தனர்.
எல்லையை கடந்து செல்வோர் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை ஏற்றுக்கொள்ளும்படி வாகன ஓட்டுனர்களுக்கு கனடா அரசியல்வாதிகளும் கோரிக்கை விடுத்தனர்.
முற்றுகையிட்டுள்ள தெருக்களில் இருந்து உடனடியாக வெளியேறாவிட்டால் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தெருக்களில் இருந்து வெளியேறாவிட்டால் வாகன ஓட்டுனர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதோடு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.