Latestஉலகம்

ஒட்டுமொத்த நிவாரண நிதி தனிப்பட்ட ஆடவரின் கணக்கில்; ஆடவர் மாயம்

தொவ்க்யோ, மே 17 – ஜப்பானில், ஒரு மாவட்டத்துக்கு சென்று சேர வேண்டிய ஒட்டுமொத்த நிவாரண நிதி, ஒரு தனிநபரின் பாக்கெட்டுக்கு சென்று சேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்திருக்கின்றது.

ஜப்பானின், Yamaguchi மாவட்டத்தில் உள்ள 463 வீடுகளுக்கு வழங்க வேண்டிய 3 லட்சத்து 58, 857 டாலர் நிதி , ஒரு சிறு தவற்றினால் , 24 வயதான ஆடவரின் ஒருவரின் கணக்கில் சேர்க்கப்பட்டது.
அந்த தவற்றுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்ட, அப்பகுதியின் தலைவர் , அந்த நிதி திரும்ப பெறப்படுமென கூறியிருந்தார்.
ஆனால், தவறுதலாக அந்த நிதி போடப்பட்ட வங்கி கணக்கு காலியாகியிருப்பதோடு , சம்பந்தப்பட்ட அந்த ஆடவரும் தற்போது தலைமறைவாகியிருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!