Latestமலேசியா

ஒப்பந்த மருத்துவர்களுக்கு நற்செய்தி ; இவ்வாண்டு 4,000-கும் மேற்பட்ட நிரந்தர வேலை வாய்ப்புகள்

கோலாலம்பூர், பிப் 10 – நாட்டிலுள்ள ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஒரு நற்செய்தி. இவ்வாண்டு மருத்துவர்களுக்கான 4,186 நிரந்தர வேலை வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது

அதற்கான விளம்பரம், அடுத்த மாதம் வெளியிடப்படும் வேளையில் நியமனம் ஜூனில் நடப்புக்கு வருமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

4,000-கும் மேற்பட்ட அந்த நிரந்த வேலை வாய்ப்புகள், 3, 586 மருத்துவர்களையும், 300 பல் மருத்தவர்களையும் 300 மருந்தக பணியாளர்களையும் உட்படுத்தியுள்ளது.

இவ்வேளையில், 2023 தொடங்கி 2025-ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் மருத்துவர்களுக்கு 1,500 நிரந்தர இடங்களை ஒதுக்கவும் அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!