
கோலாலம்பூர், ஏப் 12 – 12,800 ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தர பணியில் சேர்த்துக்கொள்வதற்கு மட்டுமே அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இப்போதைக்கு 20,300 ஒப்பந்த மருத்துவர்கள் உள்ளனர். எஞ்சியோரின் நிலைமை என்னவாகும் என வினவியிருக்கிறது Hartal Doktor Kontrak இயக்கம்.
இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும், 5000 புதிய ஒப்பந்த மருத்துவர்கள் மருத்துவ துறையில் நுழைகின்றனர்.
எனவே 12,800 பேருக்கு மட்டுமே நிரந்தர வேலை வாய்ப்பு என்பது போதாத எண்ணிக்கை என Hartal Doktor Kontrak இயக்கத்தின் பேச்சாளர் டாக்டர் முகமட் யாசின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சனையை களைய,மருத்துவ துறையில் சுகாதார சேவைகள் ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என நேற்று சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா மன்சோரை சந்தித்து மகஜர் வழங்கிய பின்னர் டாக்டர் முகமட் யாசின் இவ்வாறு கூறினார்.