
கோலாலம்பூர், ஆக 25 – 2019 ஆம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட் குற்றச்செயலில் ஈடுபட்டுவந்த 36 கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் மற்றும் சுடும் ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட தரப்பினரும் அந்த கும்பலில் அடங்குவர் என தேசிய போலீஸ் படைத் தலைவரான ஐ.ஜி.பி Razarudin Husain தெரிவித்தார். இதுதவிர பல்வேறு குண்டர் கும்பல்களும் முறியடிக்கப்பட்டன. Geng 21 , Geng 04. Geng 36, Geng 24, Geng Chandra ஆகிய குண்டர் கும்பல்ளும் அவற்றில் அடங்கும் என அவர் கூறினார். மேலும் ஜொகூரில் தீவிரமாக செயல்பட்ட சில குண்டர் கும்பல்களும் முறியடிக்கப்பட்டுள்ளதாக Razarudin Husain தெரிவித்தார்.