கோலாலம்பூர், பிப் 21 – நாட்டில் ஒமிக்ரோன் கோவிட் அலை ஏற்படத் தொடங்கியதிலிருந்து, கடந்த ஒரு வாரமாக, நாடு முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதைக் காண முடிகிறது. கிட்டதட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு வரை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக நாட்டில் கோவிட் தொற்று இரு மடங்கு அதிகமாக பதிவாகியது. அந்த பீதியினால் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வது குறைந்திருப்பதாகவும், மைடின் சூப்பர் மார்கெட்டுகளிலும் அந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் அந்நிறுவன நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் .