கோலாலம்பூர், மார்ச் 4 – ஒருதலைப்பட்டசமான மதம் மாற்றம் சட்டங்கள் தொடர்பில் மோதல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு மாநில அரசாங்கங்களுடன் கூட்டரசு அரசாங்கம் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என பக்காத்தான் ஹரப்பான் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். Sivarasa கேட்டுக்கொண்டார். பல மாநிலங்களின் சட்டங்கள் ஒருதலைப்பட்சமான மதம் மாற்றத்திற்கு அனுமதிக்கின்றன. ஆனால் வயதுக்குறைந்த பிள்ளைகள் மத மாற்றத்திற்கு தாய் , தந்தை இருவரும பெற்றோர் என்ற முறையில் அனுமதிக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டில் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதாக நாடாளுமன்றத்தில் பேரரசரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் உரையாற்றியபோது Sivarasa சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். மாறாக எதுவும் தெரியாததுபோல் கூட்டரசு அரசாங்கம் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என சிவராசா வலியுறுத்தினார்.
Related Articles
Check Also
Close