கோலாலம்பூர், பிப் 18 – மாநில சட்டங்களில் திருத்தம் செய்யப்படாதவரை வயது குறைந்த பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்படும் விவகாரத்திற்கு தீர்வு பிறக்காது என இந்திரா காந்தி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.
வயது குறைந்த பிள்ளைகளை இஸ்லாமிய சமயத்திற்கு ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றுவதை தடுப்பதற்கு அனைத்து மாநிலங்களிலும் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஏற்ப மாநிலங்களில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என ராஜேஸ் நாகராஜன் வலியுறுத்தினார்.
தற்போது சிலாங்கூர், சபா மற்றும் சரவா ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே வயது குறைந்த பிள்ளைகளின் ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தை தடுக்கின்றன. தனித்து வாழும் தாயான பினாங்கை சேந்ந்த Low Siew Hon அனுமதியின்றி வயது குறைந்த அவரது மூன்று பிள்ளைகளும் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட விவகாரம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்துரைத்தபோது ராஜேஸ் நாகராஜன் இதனை தெரிவித்தார்.