
புத்ரா ஜெயா, மே 22 – தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் ஸ்பிரிங் ரக எடை கருவி ஒரு ஆண்டுக்குள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக மின்னியல் முறையைக் கொண்ட எடைக் கருவி பயன்படுத்தப்படும் என உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ Salahuddin Ayub தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து வர்த்தகர்கள் மற்றும் அமலாக் நிறுவனங்களுடன் தமது அமைச்சு கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்தும் என்றும் அவர் கூறினார். தற்போது 25 விழுக்காடு மின் எடைக் கருவிகள் மட்டுமே நாடு தழுவிய நிலையில் பயன்படுத்தப்பட்ட வருவதாகவும் எடை தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கு பல்வேறு தரப்பினருடன் அமைச்சு பேச்சு நடத்துவதற்கும் திட்டமிட்டிருப்பதாக Salahuddin Ayub தெரிவித்தார்.