Latest
ஒரு ஆண்டுக்கு 400 மில்லியன் ரிங்கிட் வரியாக கிடைத்தாலும் சூதாட்ட மையங்களுக்கான தடை மீட்கப்படாது – முகமட் சனுசி

ஜோர்ஜ் டவுன், ஜன 6 – ஒரு ஆண்டுக்கு வருமான வரியாக 400 மில்லியன் ரிங்கிட் கிடைத்தாலும் கெடாவில் 4 இலக்கு டிக்கெட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை கெடா அரசாங்கம் மீட்டுக்கொள்ளாது என அம்மாநில மந்திரிபெசார் Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்திருக்கிறார். சூதாட்ட மையங்களை மூடும் தனது முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லையென அவர் கூறியுள்ளார். 4 இலக்க சூதாட்ட நிலையங்களால் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் எந்தவொரு நன்மையும் இல்லை. பல குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடும்ப அமைப்பு சீர்குலைந்துள்ளதோடு பலர் கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளனர். பல கணவர்கள் தங்களது மனைவியையும் பிள்ளைகளையும் தாக்குகின்றனர் என்று தமது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் முகமட் சனுசி சுட்டிக்காட்டினார்.