ஒரு எமோஜியால் RM 2,87,000ஐ இழந்த விவசாயி – குழப்பத்தை தீர்த்த நீதிபதி

கனடா ஜூலை 10 – ஒப்பந்த விதிமுறைகளை ஏற்க கட்டைவிரல் எமோஜி (Thumbs up Emoji) ஒன்றே போதும் என்று தீர்ப்பளித்து எமோஜி தொடர்பான வழக்கில் குழப்பத்தை தீர்த்து வைத்துள்ளது கனடா நீதிமன்றம்.
சஸ்காட்செவனில் (Saskatchewan) உள்ள ஸ்விஃப்ட் கரன்ட்டில் (Swift Current) விவசாய நிறுவனத்தின் உரிமையாளரான கிறிஸ் ஆக்டருக்கு (Chris Achter), அவருடன் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்யும் கென்ட் மிக்கில் பாரோ (Kent mickle borough) என்பவர் தானியம் வாங்கும் ஒப்பந்தத்தை கோரினார்.
ஆக்டருடன் தொலைபேசியில் பேசிய பின்னர், தானியம் வாங்கும் ஒப்பந்தத்தின் புகைப்படத்தை அனுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக கட்டைவிரல்-அப் ஈமோஜியை (Thumbup Emoji) அனுப்பியிருந்தார் ஆக்டர்.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தானியத்தை வழங்கவில்லை. அந்த நேரத்தில் பயிரின் விலை அதிகரித்திருந்தது. இதுசம்பந்தமாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தும், எமோஜி அனுப்பினால் ஒப்புக்கொண்டதாக அர்த்தம் இல்லை என்று வாதிட்டார் ஆக்டர்.
தொடர்ந்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிபதி டி.ஜே. கீன் தீர்ப்பு வழங்கினார். “முந்தைய Chatல் ஆக்டர் இதுபோலவே எமோஜி அனுப்பி ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அதனால் கடைசியாக அனுப்பிய எமோஜிக்கும் அதே அர்த்தம்தான்” என்று குறிப்பிட்டார்.
இந்த எமோஜியால் கையெழுத்து தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக கூறிய நீதிபதி, கென்ட்-க்கு RM2,87,604 ரிங்கிட் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆர்டருக்கு உத்தரவிட்டார்.